பெங்களூரு : 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பெங்களூருவில் 15 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரில் 15 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தகவலறிந்த காவல்துறையினர் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வெளியேற்றியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சல் வழி மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டுத் தடுப்புப் பிரிவினர், பள்ளிகளை ஆய்வு செய்யவிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் அனைவரும் பாதுகாப்பு கருதி வீட்டிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 

2022-ல் இதேபோன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் பெங்களூருவின் பல பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுவன், ஒரே நேரத்தில் பல மின்னஞ்சல்களை அனுப்பும் செயலி ஒன்றின் உதவியுடன் அந்த மிரட்டல்களை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதிரியான செயலியின் மூலம் இந்த மிரட்டல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com