6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் 'பாரதம்' பெயரும் இந்துக் கடவுளும்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்து கடவுளின் புகைப்படம் மற்றும் பாரதம் என்ற சொல்லும் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

News image
Updated On :1 டிசம்பர் 2023, 4:04 am

DIN

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் இந்துக் கடவுளின் புகைப்படம் மற்றும் பாரதம் என்ற சொல் சேர்க்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன.

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் அதன் விதிகளை மாற்றியது. இது தென் மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தடையாக இருந்தது. பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஓராண்டு காலத்திற்கு இந்த புதிய விதிமுறைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இதையடுத்து தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் ஆயுர்வேதத்தின் கடவுளாக அறியப்படும் தன்வந்திரியின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவுக்குப் பதிலாக 'பாரதம்' என மாற்றப்பட்டுள்ளது. 

ஆனால், தன்வந்திரியின் புகைப்படம் ஏற்கெனவே கருப்பு-வெள்ளையில் இருந்ததாகவும் தற்போது நிறம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதுபோல 'பாரதம்' என்ற சொல் இடம்பெற்றதிலும் பெரிய தவறும் ஒன்றும் இல்லை என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கான விருந்து அழைப்பிதழில், இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசுத் தலைவர் என்று அச்சிடப்பட்டிருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.