6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ. 250 கோடி பண மோசடி வழக்கில் வங்கித் தலைவர் கைது!

கூட்டுறவு வங்கியின் தலைவர் ரூ. 250 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கோப்புப் படம் | ENS
Updated On :1 டிசம்பர் 2023, 12:45 pm

DIN

அமலாக்கத்துறை, ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வங்கித் தலைவரை ரூ.250 கோடி பண மோசடி செய்த வழக்கில் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். 

கூட்டுறவு வங்கியின் தலைவர் முகமது ஷாஃபி தாரின் வீடு உள்பட அவருக்குத் தொடர்புடைய இடங்களில் வியாழன் முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரிவர் ஜீலம் கூட்டுறவு வீடு கட்டுமான அமைப்பு என்கிற பொய்யான நிறுவனத்துக்கு ரூ.250 கோடி கடனாகக் கொடுத்த குற்றச்சாட்டில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளதால் முகமது ஷாஃபியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ரிவர் ஜீலம் வீடு கட்டுமான கூட்டுறவு அமைப்பின் தலைவர் முகமது ஹிலால் ஏ மிரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ஊழல் தடுப்புப் பிரிவு 2020 ஆகஸ்ட்டில் இந்த ஊழலைக் கண்டறிந்து தகவலறிக்கையைப் பதிவு செய்தது.

குற்றம் சுமத்தப்பட்ட அமைப்புக்கு முறையான அனுமதியோ கூட்டுறவு சங்கப் பதிவோ வருமான வரி கணக்கோ கூட இல்லாத நிலையிலும் அந்த அமைப்பு சார்பில் வங்கியில் கோரப்பட்ட ரூ. 300 கோடிக்கான கடனை ஜம்மு காஷ்மீர் கூட்டுறவு வங்கி வழங்கியதே இந்த வழக்கிற்கான அடிப்படை.

இருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.