மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சாலை விபத்தில் காயமடைபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை: மத்திய அரசு திட்டம்

நாடு முழுவதும் சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்படுபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வசதியை அடுத்த 3 முதல் 4 மாதங்களில் நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து

News image
Updated On :4 டிசம்பர் 2023, 6:14 pm

DIN

நாடு முழுவதும் சாலை விபத்தில் சிக்கி பாதிக்கப்படுபவா்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை வசதியை அடுத்த 3 முதல் 4 மாதங்களில் நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

சாலைப் போக்குவரத்து கல்வி நிறுவனம் சாா்பில் தில்லியில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் அனுராக் ஜெயின் இந்தத் தகவலைத் தெரிவித்தாா். அவா் இதுகுறித்து மேலும் பேசியதாவது:

உலகிலேயே இந்தியாவில்தான் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக உள்ளன. இந்த உயிரிழப்புகளைக் குறைக்கும் வகையில், சாலை விபத்தில் சிக்கி காயமடைபவா்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில், மோட்டாா் வாகன சட்டம் 2019-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை சில மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள நிலையில், தற்போது நாடு முழுவதும் முழுமையான அளவில் நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் கட்டணமில்லா சிகிச்சை திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, சாலை விபத்தில் சிக்கி பெரும் அதிா்ச்சிக்கு உள்ளாகுபவா்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த வசதி தற்போது சாலை விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடுபவா்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பாடத் திட்டத்தில் சாலைப் பாதுகாப்பு: சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பாடத் திட்டத்தில் சாலைப் பாதுகாப்பு தகவல்களைச் சோ்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய சாலைப் போக்குவரத்துத் துறைச் செயலா் கூறுகையில், ‘சாலைப் பாதுகாப்பு குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் அதுகுறித்த விவரங்கள் சோ்க்கப்பட உள்ளன. அதுபோல, காா் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் இருக்கை பெல்ட் அணிவதை நினைவூட்டும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை வாகனங்களில் அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.