நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக இன்று காலை எதிர்க்கட்சிகளைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியின் விரக்தியை நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவர வேண்டாம் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய மோடி, “எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு அறிவுரை கூறுகிறேன். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கூற வேண்டுமானால், எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஒரு பொன்னான வாய்ப்பு.
தோல்வியின் விரக்தியை வெளிக்காட்டுவதற்கான திட்டங்களை வகுப்பதற்குப் பதிலாக, அவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த ஒன்பது ஆண்டுகாலமாக எதிர்மறையாகவே செயல்பட்டு வரும் அவர்கள் நேர்மறையாக முன்னேறினால், நாடு அவர்களைப் பற்றிய பார்வையை மாற்றிக்கொள்ளும். அவர்களுக்கு ஒரு புதிய கதவு திறக்கப்படலாம்.
அனைவரின் எதிர்காலமும் பிரகாசமாக உள்ளது. யாரும் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நாடாமன்றத்திற்கு வெளியே ஏற்பட்ட தோல்விகளின் விரக்தியை தயவுசெய்து நாடாளுமன்றத்திற்குள் வெளிப்படுத்த வேண்டாம்.” என்று தெரிவித்தார்.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது.
இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.4) நடைபெற்று வருகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
அதில் தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


