மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் மழைக்கு சென்னையில் கடந்த இரு நாள்களில் மழைக்கு 19 போ் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சென்னையில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு!
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
'மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருடன் நான் இருக்கிறேன்.
இந்தப் புயலால் காயமடைந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வேண்டுகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் அயராது உழைத்து வருகின்றனர். மேலும் நிலைமை முழுமையாக சீராகும் வரை அவர்கள் தங்கள் பணியைத் தொடருவார்கள்' என்று தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெசவாளர்களுக்கு ரூ. 10 லட்சம் காப்பீடு: விஜய் வாக்குறுதி

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையின் இரண்டாம் சுற்று அடுத்த வாரம் நடைபெறுமா?

இந்தியன் சூப்பர் லீக்கில் இனவெறி தாக்குதல்..! இந்திய கால்பந்து சம்மேளனம் கண்டனம்!

அடுத்து என்ன? பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் தனிக் கவனம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

