தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தலித், பழங்குடியினருக்கு எதிரான ஆட்சி இது: மல்லிகார்ஜுன கார்கே

தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News image
மல்லிகார்ஜுன கார்கே | கோப்பு
Updated On :8 டிசம்பர் 2023, 11:29 am

DIN

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது பாஜவின் பிரித்தாளும் கொள்கை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது, “தேசிய குற்றவியல் பதிவுகள் அமைப்பின் அறிக்கை புள்ளிவிபரங்களை மட்டும் காட்டவில்லை, பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களின் வாழ்வு பாதுகாப்பின்றி இருப்பதையும் காட்டுகிறது. அநீதி, கொடுமைகள் மற்றும் அடக்குமுறை ஆகியவை கடந்த 10 ஆண்டுகளாக பாஜக செய்துவந்த சதித் திட்ட கொள்கையினால் ஏற்பட்டவை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தலித்  மற்றும் பழங்குடியின மக்கள் பாஜக- ஆர்எஸ்எஸ் கட்சிகளின் அடக்குமுறையைத் தொடர்ச்சியாக எதிர்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்கே பகிர்ந்துள்ள பதிவில், 2013-க்குப் பிறகு தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 46.11 சதவீத அளவிற்கும் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 48.15 சதவீதம் அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.