காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

கர்நாடக உயர்நீதிமன்றம் காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
கனீஸ் பாத்திமா | X
கனீஸ் பாத்திமா | X

எம்எல்ஏ வேட்பு மனுவில், சொத்து விபரங்கள் குறித்து தவறான தகவல்கள் அளித்ததாக காங்கிரஸ் எம்எல்ஏ கனீஸ் பாத்திமா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

குல்பர்ஹா உத்தர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற கனீஸ் பாத்திமா மீது இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதனை விசாரித்த நீதிமன்றம், வழக்கை 4 வாரங்களுக்கு பிறகு தள்ளி வைத்து உத்தரவிட்டது. அதற்கிடையில் எம்எல்ஏ விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஏ.எஸ்.சரணபசப்பா இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். 

உள்நோக்கத்தோடு தனது சொத்து விபரங்களை மறைத்ததாக கனீஸ் பாத்திமா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கு விபரத்தை மறைத்ததாகவும் பெங்களூரூவில் உள்ள வீட்டின் சொத்து பங்கு குறித்து தெரிவிக்காததும் அசையும் சொத்துகளின் மதிப்பு 2018-ல் குறிப்பிடப்பட்டது போலவே இப்போதும் இருப்பது குறித்து சந்தேகம் எழுப்பி அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com