தானே: 26 வயது அமெரிக்காவைச் சேர்ந்த நபர், மும்பை விடுதியில் அங்குப் பணியாற்றும் பெண் ஊழியரிடம் தவறாக நடந்துக் கொள்ள முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நவி மும்பை பகுதி காவலர்கள் தெரிவித்தாவது:
டர்பே பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த, அமெரிக்கா பென்ஸில்வேனியாவைச் சேர்ந்த நபர், சனிக்கிழமை காலை 11.30 மணிக்கு விடுதியில் பணியாற்றும் பெண் ஊழியர் அறைக்கு வந்த போது தான் அணிந்திருந்த இரவு உடையை அகற்றியுள்ளார்.
இதையும் படிக்க: ஏரிகள் உடைந்ததால் வேளச்சேரி, பள்ளிக்கரணையில் வெள்ளம்: அமைச்சர்
பாலியல் செயலுக்கு வற்புறுத்தியதாக பெண் ஊழியர் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் இதுவரை கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.