
மும்பையிலிருந்து தில்லிக்கு 2 கோடி மதிப்பிலான ஹெராயினைக் கடத்த முயன்ற நைஜீரியாவைச் சேர்ந்த பெண்ணை சுங்கத்துறையின் வான் நுண்ணறிவுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், விக்டோரியா ஒக்காஃபார் எனும் நைஜீரியப் பெண், மும்பையிலிருந்து தில்லிக்கு 20 காப்சூல் ஹெராயினைத் தனது உடைகளுக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: வெள்ள நிவாரணத்தை ரூ.12,000-ஆக உயர்த்த வலியுறுத்தல்!
பிடிக்கப்பட்ட பெண் குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு, தனக்கு அந்த வேலையைக் கொடுத்த நபரின் பெயர் 'ஒன்யே' எனவும் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அந்தப் பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.