பெண்களுக்கு இலவச பயண திட்டம் 15 நாட்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும்: தெலங்கானா அமைச்சர்

தெலங்கானா மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் 15 நாட்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ரேவந்த் ரெட்டி, பொன்னம் பிரபாகர்
ரேவந்த் ரெட்டி, பொன்னம் பிரபாகர்

தெலங்கானா மாநிலத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் 15 நாட்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்பது குறித்து, 15 நாட்களுக்குப் பிறகு மறு ஆய்வு செய்யப்படும் என தெலங்கானா மாநில போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர்  30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிச.3-ஆம் தேதி நடைபெற்று, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் 64 தொகுதிகளில் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தது. தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். 

அதனையடுத்து நேற்று (டிச.9) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி தெலங்கானா துணை முதல்வர் மல்லு பாட்டீ விக்ரமர்கா, தற்காலிக அவைத் தலைவராக இருக்கும் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ அக்பருதீன் ஓவைசி, அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் ரேவந்த் ரெட்டி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், “காங்கிரஸ் அளித்த 6 வாக்குறுதிகளில் முதலாவது பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயண திட்டம். இந்தத் திட்டம் நேற்று (டிச.9) தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் ஏதேனும் குறைகள் உள்ளதா என்பது குறித்து 15 நாட்களுக்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும். ஏதேனும் குறைகள் இருப்பின் அதுகுறித்து ஆராய்ந்து களையப்படும்.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com