தீரஜ் விவகாரத்தில் ராகுல் காந்தி ஏன் மௌனமாக இருக்கிறார்?: ஜெ.பி.நட்டா கேள்வி

தீரஜ் சாஹு விவகாரத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.
தீரஜ் விவகாரத்தில் ராகுல் காந்தி ஏன் மௌனமாக இருக்கிறார்?: ஜெ.பி.நட்டா கேள்வி

தீரஜ் சாஹு விவகாரத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தி ஆகியோர் ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹுவுக்கு எதிராக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்பிக்கள் திங்கள்கிழமை காலையில் போராட்டம் நடத்தினர். 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, “காங்கிரஸ் மற்றும் ஊழல் ஆகியவை ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாஹுவின் வீட்டு அலமாரி முழுவதும் கருப்பு பணம் உள்ளன. அதை எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ராகுல் மற்றும் சோனியா காந்தி இருவரும் தொடர்ந்து மத்திய அமைப்புகளை குற்றம்சுமத்தி வந்தனர். தற்போது இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரும் ஏன் மௌனமாக இருக்கின்றனர். தீரஜ் விவகாரத்தில் ராகுல் காந்தியின் கருத்தை அறிவதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

ஏழை மக்களின் பணம் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பதை காங்கிரஸ் விளக்கவேண்டும். இந்த ஊழலுடன் தொடர்புடைய அனைவரையும் பாஜக அரசு சிறையில் அடைக்கும்.” என்று தெரிவித்தார்.

மேற்கு ஒடிசாவின் பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பல்தேவ் சாஹு குழுமத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, அந்த நிறுவனம், நிறுவனத்துக்கு தொடர்புடைய நபர்களின் பிற அலுவலகங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு வாரமாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.300 கோடி எண்ணப்பட்டுள்ளது.

பல்தேவ் சாஹு குழுமத்துக்கும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் தீரஜ் பிரசாத் சாஹுவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com