டிச.14-ல் தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தல்!

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிச.14-ல் தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தல்!

தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிச.3-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

இதில் 64 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 39 தொகுதிகளில் வெற்றியடைந்த பிஆர்எஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. பாஜக வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

இந்நிலையில் தெலங்கானா சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தல் டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 13-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த அக்பருதீன் ஒவைசி தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் பதவிப்பிரமாண நிகழ்ச்சியை டிச.9-ஆம் தேதி அவர் நடத்தி வைத்தார்.

பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவரது தேர்வை புறக்கணித்ததையடுத்து திங்கள்கிழமை சட்டப்பேரவைத் தலைவருக்கான தேர்தலை நடத்துவதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்திருந்தார். 

இந்நிலையில் அதற்கு மாறாக டிசம்பர் 14-ஆம் தேதி சட்டப்பேரவை தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com