9 ஆண்டுகளில் 82% மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு!

இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 82 சதவிகித மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.
9 ஆண்டுகளில் 82% மருத்துவக் கல்லூரிகள் அதிகரிப்பு!

தில்லி: இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 82 சதவிகித மருத்துவக் கல்லூரிகள் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், மக்களவை உறுப்பினர் எழுப்பிய மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான கேள்விக்கு பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வ பதிலை தாக்கல் செய்துள்ளார்.

அதில், “நாட்டில் 2014ஆம் ஆண்டுக்கு முன்பாக 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது 82% அதிகரித்து 706 கல்லூரிகள் உள்ளன. 51,348-ஆக இருந்த எம்பிபிஎஸ் சீட்டுகள் தற்போது 1,08,940-ஆக அதிகரித்துள்ளன.

அதேபோல், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சீட்டுகள் 127% அதிகரித்து 70,674-ஆக உள்ளன.” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com