
மேற்கு வங்க மாநிலத்தின் போக்குவரத்துத் துறை நடப்பு நிதியாண்டில் ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பதாக அம்மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விதியை மீறி அளவுக்கதிமாக சுமையை ஏற்றும் வாகனங்களால் உருவாகும் விபத்துகள், கடுமையான சட்ட நடைமுறையால் பெருமளவுக்கு குறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
2023-24 நிதியாண்டின் முடிவில் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் ஈட்டியிருப்போம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ரூ.3600 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. புதிய வாகங்களுக்கான பதிவின் மூலமாக பெரும்பங்கு வருவாய் கிடைத்துள்ளது.
இதையும் படிக்க: ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு!
தனியார் வாகனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையை வசூலிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவை இரண்டின் வழியாகத் தான் பெரும்பகுதி வருவாய் சாத்தியமாகியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.