கோப்புப்படம்
கோப்புப்படம்

காதலர்கள் தலைமறைவு, தாயை நிர்வாணமாக்கி துன்புறுத்திய கும்பல்!

கர்நாடக மாநிலத்தில் காதல் ஜோடி ஒன்று தலைமறைவானதால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், இளைஞனின் தாயை நிர்வாணப்படுத்தி மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர். 
Published on

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்திலுள்ள கிராமத்தில் காதல் ஜோடி ஒன்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் அந்த இளைஞனின் தாயை நிர்வாணப்படுத்தி மின் கம்பத்தில் கட்டி வைத்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தக் குற்றத்தோடு தொடர்புடைய 7 பேரை இதுவரை கைது செய்திருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் கி.பரமேஷ்வரா செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். 

தலைமறைவான ஆணும் பெண்ணும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெண்ணைக் காப்பாறி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 7 குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறிய காவல்துறையினர், தலைமறைவான ஜோடியையும் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கர்நாடக முதல்வர் சித்தராமையா "இந்த மனிதத் தன்மையற்றவர்களின் செயலை அரசு சகித்துக்கொள்ளாது. இந்த குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் இதுவரைக் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது இந்த அரசாங்கத்தின் பொறுப்பு எனத் தெரிவித்துள்ளார்."
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com