நாடாளுமன்ற தாக்குதல் நாள்: மோடி, சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி

நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற தாக்குதல் நாள் அஞ்சலி
நாடாளுமன்ற தாக்குதல் நாள் அஞ்சலி

தில்லி: நாடாளுமன்ற தாக்குதல் தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2001-ஆம் ஆண்டு டிச.13-ஆம் தேதி லக்ஷா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது ஆகிய பயங்கரவாத குழுக்களைச் சோ்ந்த பயங்கரவாதிகள் 5 போ் நாடாளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தினா். இத்தாக்குதலில் தில்லி போலீஸாா் 5 போ், மத்திய ரிசா்வ் பாதுகாப்பு படையைச் சோ்ந்த பெண் ஒருவா், நாடாளுமன்ற வளாக தோட்டப் பணியாளா்கள் 2 போ் மற்றும் செய்தியாளா் ஒருவா் என 9 போ் உயிரிழந்தனா். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 5 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

தாக்குதல் நடைபெற்று இன்று 22-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, காங்கிரஸ் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள், பாஜக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com