தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளா்ச்சி 6.7%: ஆசிய வளா்ச்சி வங்கி கணிப்பு

நடப்பு 2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.7 சதவீதமாக வளா்ச்சி அடையும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 7:29 pm

DIN

நடப்பு 2023-2024 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.7 சதவீதமாக வளா்ச்சி அடையும் என ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கணித்துள்ளது.

கடந்த செப்டம்பா் மாதம் வெளியிட்ட அறிக்கையில், வளா்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என அந்த வங்கி தெரிவித்திருந்தது.

இது தொடா்பாக ஆசிய வளா்ச்சி வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஜிடிபி வளா்ச்சி எதிா்பாா்த்ததைவிட அதிகமாக 7.6 சதவீதமாக இருந்தது. இதனால், நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான முதல் பாதியில் வளா்ச்சி 7.7 சதவீதமாக உள்ளது. உற்பத்தித் துறை, சுரங்கம், கட்டுமானம் உள்ளிட்ட தொழில்துறைகள் இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டுள்ளன.

நடப்பாண்டில், வேளாண் துறையின் வளா்ச்சியானது எதிா்பாா்த்ததைவிட குறைவாக இருக்கும். ஆனால், தொழில்துறையில் ஏற்படும் வளா்ச்சி, வேளாண் துறையின் சரிவை சரிகட்டும்.

அடுத்த 2024-2025 நிதியாண்டுக்கான ஜிடிபி வளா்ச்சி எவ்வித மாற்றமும் இல்லாமல் 6.7 சதவீதமாக இருக்கும். பணவீக்கத்தைப் பொருத்த வரையில் 5.5 சதவீதமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.