தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

காங்கிரஸ் பெயரில் போலி நன்கொடைப் பக்கம்.. பாஜகவுக்கு செல்லும் லிங்க்

காங்கிரஸ் நன்கொடைப் பக்கத்தைப் போல போலியாக உருவாக்கப்பட்ட இணையதளப் பக்கங்கள் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்குச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2023, 9:04 am

DIN

காங்கிரஸ் நன்கொடைப் பக்கத்தைப் போல போலியாக உருவாக்கப்பட்ட இணையதளப் பக்கங்கள் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்குச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், அக்கட்சியால் நன்கொடைப் பக்கம் தொடங்கப்பட்ட நிலையில், அதுபோன்ற போலியான பக்கங்கள் உருவாக்கப்பட்டு அவை பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் பக்கங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒன்றே, ஆளும் மத்திய அரசின் அரசியல் போக்குகளை வெளிச்சம்போட்டு காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸின் ‘நாட்டுக்கு நன்கொடை’ திட்டத்தை அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேம்பட்ட இந்தியாவை உருவாக்க ‘நாட்டுக்கு நன்கொடை’ என்ற பெயரில் இணையவழியில் பொதுமக்களிடம் காங்கிரஸ் நிதி திரட்ட உள்ளது. இந்தத் திட்டத்தை தில்லியில் காங்கிரஸ் தலைவா் காா்கே திங்கள்கிழமை தொடங்கிவைத்து ரூ.1.38 லட்சம் நன்கொடை வழங்கினாா்.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக அளிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி என்ற இணையதள முகவரிகளை உருவாக்கியுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளத்தில், முன்பின் தெரியாத சிலர், என்ற முகவரிகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த லிங்குகளை கிளிக் செய்தால், அவை முறையே பாஜக மற்றும் ஓபிஇந்தியா இணையதளப் பக்கங்களுக்குச் செல்கின்றன என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

Story image

இந்த மோசடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். அதாவது, காங்கிரஸின் 138 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் போலியாக பெயரிடப்பட்ட இணையதளங்கள், பாஜகவின் நன்கொடைப் பக்கத்திற்கும், இந்துத்துவா இணையதள அமைப்பின் பயனர்களுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன என்பதை காங்கிரஸ் கட்சியினர் தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, காங்கிரஸ் தொண்டர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இது குறித்து பாஜக தகவல் தொழில்நுட்பத் தலைவர் அமித் மாளவியா விளக்கம் அளித்திருக்கிறார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில், தயவுசெய்து காங்கிரஸின் ‘டோனேட் ஃபார் தேஷ்’ மோசடிக்கு ஸ்ரீகிங் ஜேன் மீது குற்றம் சாட்ட வேண்டாம். இது ஒருபுறமிருக்க, காங்கிரஸ் கட்சியால் போலி இணையதளப் பக்கங்களையே தடுக்க முடியவில்லை. உதாரணமாக @donatefordesh ஐப் பார்க்கவும். அவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

வணிக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் பொதுவாக தங்கள் பெயரில் எந்த ஒரு மோசடியும் நடக்காமல் தடுக்க ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட வலைத்தளங்களின் டொமைன்களை வாங்கி வைத்துக் கொள்வது வழக்கம்.

இது குறித்து எக்ஸ் பதிவாளர் சந்தீப் மனுதானே, தனது எக்ஸ் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் நாட்டுக்கு நன்கொடை திட்டத்தில் போலி இணையதளங்கள் 3 விஷயங்களை தெளிவாக விளக்குகிறது

காங்கிரஸ் குழுவினர் மிக ஆழமாக திட்டமிடாமல் விட்டது, உயர் தலைமையின் மேற்பார்வை இல்லாதது, நடைமுறை ஏற்படும் சிக்கல்கள் குறித்த தெளிவு இல்லாமை போன்றவை உறுதியாகியுள்ளன.

அனைத்தும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். தந்திரமான எதிரிகளால் மிகப்பெரிய நன்கொடை திட்டம் ஒரே நாளில் மடைமாற்றப்பட்டால், அது நம்மைப்பற்றித்தான் பேசும், எதிரிகளைப் பற்றி அல்ல. தற்காலத்திய உண்மையான அரசியலுக்கு வரவேற்கிறோம்.

டொனேட் ஃபார் தேஷ் என்ற இணைய டொமைன்கள் (com / in / org) அனைத்தும் பாஜகவால் முன்பதிவு செய்யப்பட்டு அவர்களின் சொந்த நிதி பக்கங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.


இது குறித்து மற்றொரு தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், காங்கிரஸ் கட்சி நன்கொடைப் பக்கம் குறித்து அறிவிப்பதற்கு முன், கட்சி களப் பெயர்களை பதிவு செய்யவில்லை. இதன் விளைவாக, டோனேட் ஃபார் தேஷ்.ஓஆர்ஜி-ஐ பாஜக பதிவு செய்துள்ளது. இதனால்தான் காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடை பக்கம் என நினைத்து கிளிக் செய்வோருக்கு, அது பாஜகவின் சொந்த நன்கொடை பக்கத்திற்கு அழைத்துச் செல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.