புதுதில்லி: மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது.
2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிா்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ என்ற கூட்டணியை அமைத்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்தியா கூட்டணியில் உள்ளன.
இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தேசிய கூட்டணிக் குழு ஒன்றை காங்கிரஸ் அமைத்துள்ளது. காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், பொதுச் செயலாளருமான முகுல் வாஸ்னிக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஸ் பாகெல், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரஃபீனியா ஹாட்ரிக் கோல்..! புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
கரூர் பலி: சென்னையில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி விஜய் கடிதம்!

பாக்கியலட்சுமி தொடர் இயக்குநரின் புதிய தொடர்! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

