மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன!

குற்றவியல் சட்டங்களுக்கு கொண்டு வரப்பட்டுள்ள மூன்று மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

காலனிய ஆட்சிக்கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்‌ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ மசோதா ஆகிய மூன்று மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்தார்.

இந்த மூன்று மசோதாக்களும் முறையாக இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றிற்கு மாற்றாக அமையும். 

இந்த மசோதாக்களின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு புதன்கிழமை பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “முழுமையான ஆலோசனைகளுக்குப் பிறகே இந்த மூன்று மசோதாக்களும் வரைவு செய்யப்பட்டன. இந்த மசோதாக்களில் உள்ள ஒவ்வொரு நிறுத்தற்குறி உட்பட அனைத்து பகுதிகளும் அவையில் விவாதத்திற்கு வைக்கப்பட்டன.

தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டங்கள் நீதி வழங்குவதற்கு பதிலாக தண்டிக்கும் நோக்கிலேயே இயற்றப்பட்ட காலனிய ஆட்சிக்கால மனோபாவத்தை பிரதிபலிக்கின்றன.

ஆனால் தற்போதைய புதிய மசோதாக்கள் இந்திய சிந்தனையின் அடிப்படையிலான நீதிமுறையை நிலைநிறுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளன.” என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com