5 ஆண்டுகளில் நமது சாலைகள் அமெரிக்க தரத்திற்கு மாறும்: நிதின் கட்கரி!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் சாலைக் கட்டமைப்புகள் அமெரிக்காவைப் போல மாறும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “கடந்த 9 ஆண்டுகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களில் 50 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளன. 

எந்த ஒப்பந்ததாரரும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு என்னை நேரில் சந்திக்க தேவையில்லை.

நாங்கள் முடிவெடுப்பதில் வெளிப்படையாகவும், விரைவாகவும் இருக்கிறோம். குறித்த நேரத்திற்குள் மிகவும் தரமாக வேலையை முடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கிறோம். 

அமைச்சகம், ஒப்பந்ததாரர்கள் மற்றும் வங்கியாளர்கள் அனைவரையும் ஒரு குடும்பமாக கருதுகிறோம். 

தரமான வேலைகளை நாங்கள் ஊக்கப்படுத்துகிறோம். அதனால்தான் ஏழு உலக சாதனைகளைச் செய்ய முடிந்துள்ளது. மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் மகத்தான சாதனை இது. 

அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு நமது சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு இருக்கும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ஐந்தாண்டுகளில் பொதுப் போக்குவரத்து முழுவதுமாக மாற்றமடையும், குறைந்த அளவு மாசுபாட்டுடன் போக்குவரத்து மாறும்.” என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com