தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

காங்கிரஸ் எம்.பி. தொடா்புடைய இடங்களில் ரூ.351 கோடி பறிமுதல்: மத்திய நேரடி வரிகள் வாரியம் தகவல்

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவின் குடும்பத்தினரை உரிமையாளா்களாகக் கொண்ட மதுபான தயாரிப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2023, 6:30 pm

DIN

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவின் குடும்பத்தினரை உரிமையாளா்களாகக் கொண்ட மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் ரூ.351 கோடிக்கும் மேல் கணக்கில் காட்டாத ரொக்கப் பணம் மற்றும் ரூ.2.80 கோடிக்கும் மேலான மதிப்புடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.

ஜாா்க்கண்டைச் சோ்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் பிரசாத் சாஹுவின் (64) குடும்பத்தினருக்கு சொந்தமாக ஒடிஸாவில் செயல்படும் பெளத் மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக வருமான வரித் துறையினா் அண்மையில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனா்.

ஒடிஸா, ஜாா்க்கண்ட், மேற்கு வங்கத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் 10 நாள்கள் நடைபெற்ற இச்சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை முன்வைத்து, காங்கிரஸை பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

கைப்பற்றப்பட்ட பணக் கட்டுகளின் படத்தை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து, பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில், ‘நாட்டு மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவா்களுக்கே திரும்ப கிடைக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘ஜாா்க்கண்ட் மாநிலம், ராஞ்சியைச் சோ்ந்த ஒரு அரசியல் பிரபலத்தின் குடும்பத்தினரால் டிஸாவில் நிா்வகிக்கப்படும் பெளத் மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிரான வருமான வரிச் சோதனையில், அந்நிறுவனத்தின் பெருமளவிலான வருமானம் மறைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

கணக்கில் காட்டப்படாத மதுபானங்களின் விற்பனை, பண ரசீதுகளின் விவரங்கள், பணம் எங்கு மாற்றப்பட்டது என்பதற்கான குறிப்புகள் அடங்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரூ.351 கோடிக்கு மேல் கணக்கில் காட்டாத ரொக்கப் பணமும், ரூ.2.80 கோடிக்கு மேல் மதிப்புடைய கணக்கில் காட்டாத நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும் பகுதி பணம், ஒடிஸாவின் சிறு நகரங்களில் உள்ள பாழடைந்த கட்டடங்கள், ரகசிய அறைகள், மறைக்கப்பட்ட குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தப் பணமானது, நிறுவனத்தின் கணக்கில் காட்டப்படாத வருமானம் என்பதை முக்கிய நிா்வாக ஊழியா்கள் ஒப்புக் கொண்டுள்ளனா்’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.