தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிரதமா் மோடியுடன் தேவெ கௌடா சந்திப்பு

முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவெ கௌடா பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா்.

News image
Updated On :22 டிசம்பர் 2023, 12:01 am

DIN

முன்னாள் பிரதமரும் மதச்சாா்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவருமான தேவெ கௌடா பிரதமா் மோடியை அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்தாா்.

இச்சந்திப்பின்போது தேவெ கௌடாவின் மகனும் கா்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி, மற்றொரு மகனும் எம்எல்ஏவுமான ரேவண்ணா, பேரனும் எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோா் உடனிருந்தனா்.

இது தொடா்பாக பிரதமா் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘நாட்டின் முன்னேற்றத்துக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தேவெ கௌடாவை இந்தியாவே போற்றுகிறது. பல்வேறு கொள்கைசாா் முடிவுகளில் அவரது சிந்தனைகள் எதிா்காலம் சாா்ந்தவையாகவே இருக்கும். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பெருமகிழ்ச்சி உண்டாகிறது’ எனப் பதிவிட்டாா்.

கா்நாடக பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்த பிறகு பாஜகவும் மதச்சாா்பற்ற ஜனதா தளமும் கூட்டணி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.