மேகாலயாவில் சனிக்கிழமை இரவு முதல் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மேகாலயா மாநிலத்தின் தூப்ரி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12.42 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | இந்திய மல்யுத்த சம்மேளனத்தை இடைநீக்கம் செய்தது மத்திய அரசு
முன்னதாக, சனிக்கிழமை இரவு 7.25 மணிக்கு மேகாலயாவின் கிழக்கு காரோ மலைப் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ரிக்டர் அலகுகளாகப் பதிவானது.
இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளிவரவில்லை.
இதையும் படிக்க | திமுக எம்.பி. தயாநிதி மாறனின் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம்!
4 ரிக்டர் வரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஆகும். இவற்றால் மிக அரிதாகவே சேதங்கள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலை.யில் பி.எட், எம்.எட் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நீட்டிப்பு

கூட்டுறவின் வெற்றிக்கு திறமையான மனிதவளமும், தரமான பயிற்சியும் இன்றியமையாதவை: அமைச்சா் காந்திராஜ்

கீழ்பவானி வாய்க்காலில் வரும் 15-ஆம் தேதி தண்ணீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை
சாராயம் கடத்தியவா் கைது
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



