திமுக எம்.பி. தயாநிதி மாறனின் கருத்துக்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம்!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் கருத்துக்கு பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனின் கருத்துக்கு பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறித்து திமுக எம்.பி. தயாநிதி மாறன் கூறிய கருத்துக்கு பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் பேசியதாவது, “எங்களது ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைப் போன்றே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுகவும் சமூகநீதியில் நம்பிக்கை கொண்ட கட்சியாகும். அந்தக் கட்சியில் உள்ள ஒரு தலைவர் இதுபோன்று பேசியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

திமுக எம்.பி. ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை முன்னிலைப்படுத்தியிருந்தாலோ அல்லது சில சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இதுபோன்ற அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டு துன்பப்படுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டியிருந்தாலோ, அது சரியானதாக இருந்திருக்கும்.

ஆனால் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும் கேலி செய்யும் விதத்தில் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

நாட்டின் பிற பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும் மக்கள் மரியாதை அளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்று அவர் கூறினார்.

முன்னதாக தயாநிதி மாறன், ”பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஹிந்தி மட்டுமே தெரிந்த மக்கள் தமிழ்நாட்டைப் போன்ற மாநிலங்களுக்கு வந்து கழிவறை சுத்தம் செய்தல், சாலை போடுதல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். அவர்களைப் போலல்லாமல் ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஐ.டி. துறைக்கு வேலைக்குச் செல்கின்றனர்.” என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com