நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட பெண் மீதான யுஏபிஏ வழக்கை ரத்து செய்யக்கோரி போராட்டம் அறிவிப்பு!

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட நீலம் தேவி மீதான யுஏபிஏ சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஹரியாணா விவசாயிகள் அமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட நீலம் தேவி மீதான யுஏபிஏ சட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி ஹரியாணா விவசாயிகள் அமைப்பு போராட்டம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறலில் ஈடுபட்ட நீலம் தேவி ஆசாத் மீது போடப்பட்டுள்ள யுஏபிஏ சட்ட வழக்கினை ரத்து செய்யக் கோரி, ஹரியாணா சம்யுக்த் கிஸான் மோர்ச்சா உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் டிசம்பர் 29 அன்று போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளன.

நர்வானா ரயில் நிலையத்திலிருந்து நர்வானா நீதிமன்றம் வரை இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

நீலம் தேவி மற்றும் அவரது குழுவினர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள யுஏபிஏ சட்டப்பிரிவை நீக்குமாறு குடியரசுத் தலைவருக்கு மனு எழுதப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

ஜிந்த் மாவட்டத்தின் மகளுக்கு நீதி கிடைப்பதற்காக தங்களின் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஆசாத் பல்வா என்பவர் கூறினார்.

இதற்கிடையில், நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீலம் தேவிக்கு எஃப்.ஐ.ஆர் நகலை வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை தில்லி உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

முன்னதாக, கடந்த டிச. 13-ஆம் தேதி மக்களவையில் பாா்வையாளா்கள் மாடத்தில் இருந்து சாகா் சா்மா, மனோரஞ்சன் ஆகிய இரு இளைஞா்கள் அவைக்குள் திடீரென குதித்து, வண்ணப் புகைக் குப்பிகளை வீசி, நாட்டில் ‘சா்வாதிகாரம் நடைபெறக் கூடாது’ என்று முழக்கங்களை எழுப்பினா்.

அதே வேளையில், நாடாளுமன்றத்துக்கு வெளியே அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவா், புகையை உமிழும் குப்பிகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் இந்த நிகழ்வுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லலித் ஜா, அவருக்கு உதவியதாக மகேஷ் குமாவத் ஆகிய இருவா் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com