6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தங்கம் கடத்திய நபர்... பிடிபட்டது எப்படி?

துபையில் இருந்து தங்கம் கடத்தி வந்த நபர், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:34 pm

DIN

அமிர்தசரஸ்​: துபையில் இருந்து அமிர்தசரஸ் விமான நிலையத்துக்கு 1 கிலோ தங்கம் கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ரூ. 67 லட்சம் மதிப்புள்ள 1.068 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை அவரிடமிருந்து பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தல் தடுப்பு பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பயணி ஒருவரைத் தடுத்து அதிகாரிகள் சோதனையிட்டனர்.

மஞ்சள் உறையில் தங்கக் கட்டிகள் அடைக்கப்பட்டு, அவரது இடுப்பில் சுற்றப்பட்டிருந்தது சோதனையில் கண்டறியப்பட்டது.

அந்தப் பயணி, தான் தங்கம் கடத்த முயன்றதையும் அதற்கு கூலியாக ரூ.10 ஆயிரம் பெற்றதாகவும் துபையில் தன்னிடம் தங்கம் அளிக்கப்பட்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், விசாரணைக்கு அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.