வட இந்தியாவில் 2 நாள்களுக்கு பனிமூட்டம் அதிகரிக்கும்: இந்திய வானிலை

வடமேற்கு அதையொட்டிய மத்திய இந்தியாவின் சமவெளியின் பல பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கடும் பனிமூட்டம் நிலவும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் குளிரான காலநிலை தொடரும் என வானிலை முன்னறிவிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஜனவரி 1 ஹரியாணா, சண்டிகர், தில்லி, கிழக்கு உத்தரப் பிரதேசத்தில் ஆகிய மாநிலங்களில் கடும் பனிமூட்டமும், ஜனவரி 2ல் மேற்கு வங்கம், ஒடிசா, பிகார், அசாம், மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலும் கடும் பனிமூட்டம் நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். 

தென் தமிழகம், தெற்கு கேரளம் மற்றும் லட்சத்தீவுகளில் ஜனவரி 3ஆம் தேதி வரை சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com