கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் அம்மாநில மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்கள்.
கேரள மாநிலம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள கேரள மக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ஆளுநர்.
ஆளுநர், “2024-ம் ஆண்டு நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதோடு மகிழ்வையும் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் கருத்தியல் பார்வையிலும் செயல் வழியிலும் உறுதி செய்து மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் நல்லிணக்கத்துக்கு வழிகோலும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், “உலகமே புத்தாண்டை வரவேற்கும் இந்த வேளையில் நாம் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சமத்துவம் நிறைந்த நல்லதொரு நாளைத் தொடங்கும் நம்பிக்கையைப் பகிர்ந்துக் கொள்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களைப் பிரிவினைவாத அரசியல் மூலமாக விரோத சக்திகள் பிரிக்க நினைக்கும் முயற்சிகளிலிருந்து காக்கவும் அதனை மனிதநேயத்தின் அடிப்படையில் தோற்கடிக்கவும் வேண்டும், வெறுப்பு பிரசாரத்தை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே எதிர்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார், கேரள முதல்வர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கும்பகோணம் அரசுப் போக்குவரத்து கழகத்தில் சேரும் முதல் பெண் ஓட்டுநா் ரம்யா

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது

பெரம்பலூரில் விலங்குகளுக்கான கருத்தடை மையம் திறப்பு

காவல்துறை சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

