தமிழகம், லட்சத்தீவுக்கு மோடி வருகை

தமிழகம் வருகிற மோடி லட்சத்தீவுக்கும் செல்லவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவுக்கு ஜன.2,3 ஆகிய தேதிகளில் வருகை தரவுள்ளார். பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்க அவர் வருவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜன.2-ல் நடைபெறவுள்ள பாரதிதாசன் பல்கலைகழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் பிரதமர், ரூ.19,850 கோடி மதிப்பிலான ரயில், விமான சேவை, சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதன் பிறகு லட்சதீவில் உள்ள அகத்தி பகுதியில் பொது விழாவில் பங்கேற்கிறார்.

ஜன.3 லட்சத்தீவின் கவரத்தி பகுதியில் தொலைதொடர்பு, குடிநீர், சூரிய மின்சக்தி மற்றும் மருத்துவ துறைகள் சார்ந்த திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

மோடி திறந்து வைக்கவுள்ள திருச்சி விமான நிலையத்தின் புது கட்டடம், ரூ.1,100 கோடி மதிப்பில் உருவாகியுள்ளது.

பன்னாட்டு விமான நிலையத்தின் புதிய முனையம் ஆண்டுக்கு 44 லட்சம் பயணிகள் வந்துசெல்ல ஏற்ற வசதியோடும் ஒரே நேரத்தில் 3,500 பயணிகள் வரை பயன்படுத்தும் அளவுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளது.

மதுரை முதல் தூத்துக்குடி வரையிலான 160 கிமீ ரயில் பாதையை இரட்டை தடமாக மாற்றுவது உள்ளிட்ட மூன்று ரயில்வே திட்டங்களை அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com