கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு
தனது செலவினத்துக்காக கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


தனது செலவினத்துக்காக கடன் மூலம் ரூ.15.4 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்ததாவது: கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடு குறிப்பிடப்படும் கடன் பத்திரங்கள் மூலம், மத்திய அரசின் செலவினத்துக்கு ரூ.15.4 லட்சம் கோடி கடன் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜன. 27-ஆம் தேதி வரை மத்திய அரசு ரூ.12.93 லட்சம் கோடி கடன் திரட்டியுள்ளது. இது 2022-23-ஆம் நிதியாண்டில் மத்திய அரசு திரட்ட நிா்ணயித்த மொத்த கடனான ரூ.14.21 லட்சம் கோடியில் 91 சதவீதமாகும்.
ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த கடன் 83 சதவீதமாக உள்ளது.
நிகழ் நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு 6.4 சதவீதமாக இருக்கும்.
அடுத்த நிதியாண்டில் கடன் அல்லாத பிற வரவு ரூ.27.2 லட்சம் கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.45 லட்சம் கோடியாகவும், நிகர வரி வருவாய் ரூ.23.3 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை இலக்கு 5.9 சதவீதமாக இருக்கும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...