இந்தப் பாடல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது: வாக்களிப்பது குறித்த இந்த விழிப்புணர்வு பாடல் பிரபலங்களின் மூலம் கவனத்தைப் பெற தொடங்கிவிட்டது. பல்வேறு மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான ஒரு வாரத்திலேயே பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் யூடியூப் என அனைத்துத் தளங்களையும் சேர்த்து 3.5 லட்சம் பார்வைகளையும், 5.6 லைக்குகளையும் கடந்துள்ளது. இந்தப் பாடலின் நோக்கம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து உணர்த்தி, வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.