தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது: எடியூரப்பா 

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

News image
Updated On :4 பிப்ரவரி 2023, 4:25 pm

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று அம்மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பெங்களூருவில் நடைபெற்ற சிறப்பு செயற்குழு கூட்டத்தில் பேசிய எடியூரப்பா, மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்கள் அனைவரின் வீடுகளுக்கும் சென்றடைந்துள்ளன. வரும் கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக 130 முதல் 140 இடங்களை கைப்பற்றும். 

மாநிலத்தில் எந்த சூழ்நிலையிலும் பாஜக ஆட்சிக்கு வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. காங்கிரஸுக்குள் ஏற்கெனவே முதல்வர் பதவிக்கு போட்டி தொடங்கிவிட்டது. பசு வதை தடுப்பு மசோதா கொண்டு வந்துள்ளோம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுகிறோம். 

மாநிலத்தில் பிறர் ஆதரவு இல்லாமல் பாஜக ஆட்சிக்கு வரும் என்றார். அப்போது ராகுல் காந்தி ஒரு தலைவரா? என்றும் கேலி செய்து கேள்வி எழுப்பினார். கர்நாடக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக அங்கு தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.