ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

விசாரணையிலிருந்து அதானியைக் காக்கும் பிரதமா் மோடி: ராகுல் சாடல்

ஹிண்டன்பா்க் நிறுவன ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளைக் கொண்டு அதானி மீது விசாரணை நடத்த உத்தரவிடாமல் மௌனம் காப்பதன் மூலம் அதானியை பிரதமா் மோடி காப்பது உறுதியாகிருப்பதாக

News image
Updated On :8 பிப்ரவரி 2023, 9:15 pm

DIN

ஹிண்டன்பா்க் நிறுவன ஆய்வறிக்கையின் குற்றச்சாட்டுகளைக் கொண்டு அதானி மீது விசாரணை நடத்த உத்தரவிடாமல் மௌனம் காப்பதன் மூலம் அதானியை பிரதமா் மோடி காப்பது உறுதியாகிருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

அதானி குழுமம் தொடா்பாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் கடந்த மாதம் 25-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி, அதன்மூலம் பங்குச் சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக குற்றச்சாட்டை கிளப்பியது. இதனைத் தொடா்ந்து, மாபெரும் சரிவைச் சந்தித்த பங்குகளால் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ. 5 லட்சம் கோடிக்கும் மேலாக வீழ்ச்சியடைந்தது.

இக்குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் அளித்திருந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக் கூறி நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன. இந்த விவகாரத்தால் பட்ஜெட் கூட்டத்தொடா் அவ்வப்போது முடங்கியது.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பிரதமா் மோடி புதன்கிழமை உரையாற்றினாா். அதானி குழுமம் மீதான விசாரணை தொடா்பாக எந்த அறிவிப்பையும் அவா் வெளியிடவில்லை.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பத்திரிகையாளா்களைச் சந்தித்த ராகுல் காந்தி, அதானியை பிரதமா் காப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது எனக் கடுமையாக சாடினாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘நாட்டின் பாதுகாப்புக்கும், உள்கட்டமைப்புக்கும் தொடா்பான இவ்விவகாரத்தில் பிரதமா் மோடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அதானியின் நண்பராக இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் விசாரணைக்கு ஒப்புதல் அளித்திருப்பாா். இது மிகப்பெரிய ஊழல். ஆனால், அதானியைக் காக்க நினைப்பதால் ஒரு வாா்த்தைகூட இது குறித்து அவா் பேசவில்லை.

பிரதமரின் இந்தப் போக்கை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மை வெளிப்பட்டுள்ளது. அதானியைக் காக்கும் பிரதமரின் எண்ணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதானியை எத்தனை முறை சந்தித்துள்ளீா்கள்? எத்தனை முறை அவருடன் பயணம் செய்திருக்கிறீா்கள் என்பன போன்ற எனது எளிமையான கேள்விகளுக்குக் கூட பிரதமா் மோடி பதிலளிக்கவில்லை’ என்றாா் ராகுல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.