4 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை சென்றடைந்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!
மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.


மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார்.
இந்த நான்கு நாள்கள் பயணத்தின்போது அவர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு முக்கியத் தலைவர்களை சந்திக்க உள்ளார். மேலும், இந்தப் பயணத்தின்போது இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையத்தை இலங்கை மக்களுக்காக அர்ப்பணிக்க உள்ளார்.
இலங்கை சென்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு இலங்கையின் பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் யாழ்ப்பாணத்தை சென்றடைந்த அவர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் இந்தியா கார்னர் பகுதியில் உள்ள இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர், ஆளுநர் ஜீவன் தியாகராஜாவை சந்தித்த அவர் இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே உள்ளே பந்தம் குறித்துப் பேசினார். மேலும், யாழ்ப்பாணத்தின் வளர்ச்சி குறித்தும், அதில் இந்தியாவின் பங்களிப்பு குறித்தும் அவர் பேசினார்.
இது குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: அண்டைநாடுகளுக்கு முதல் முக்கியத்தும் என்ற திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசாங்கம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இலங்கை மக்களுக்கு உதவுவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்திய அரசாங்கம் சார்பில் இலங்கையில் உள்ள 250 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது எனப் பதிவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கலாசார மையம் குறித்த அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாவது: இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான நல்லுறவை வெளிப்படுத்தும் விதமாக இந்த யாழ்ப்பாணம் கலாசார மையம் அமைந்துள்ளது. இந்த கலாசார மையத்தின் முக்கிய நோக்கம் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கான உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவதே ஆகும். இந்த கலாசார மைய வளாகத்தில் அருங்காட்சியகம், திரை வசதியுடன் கூடிய பெரிய அரங்கம் உள்ளிட்ட பல்வேறு விதமான வசதிகள் உள்ளன. இந்த அரங்கம் 600 பேருக்கு இடமளிக்கும் வசதி கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...