மும்பை: வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பிரதமர்!

மும்பை - சோலாபூர் மற்றும் மும்பை - ஷீரடி இடையே இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 10) தொடங்கி வைத்தார்.
மும்பை: வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்த பிரதமர்!

மும்பை - சோலாபூர் மற்றும் மும்பை - ஷீரடி இடையே இரண்டு வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 10) தொடங்கி வைத்தார்.

தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி முனையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மும்பை-சோலாபூர் இடையிலான முதல் வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார். பின்னர், மும்பை - ஷீரடி இடையேயான இரண்டாவது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்.

மும்பை-சோலாபூர் இடையே வந்தே பாரத் ரயில் 455 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த 455 கிலோமீட்டர் தூரத்தினை 6 மணிநேரம் 30 நிமிடத்தில் வந்தே பாரத் ரயில் சென்றடைகிறது. தற்போது உள்ள நேரத்தினைக் காட்டிலும் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை 1 மணி நேரம் முன்னதாகவே சோலாபூரை சென்றடைகிறது. அதேபோல மற்றொரு வழித்தடமான மும்பை - ஷீரடி இடையேயான 343 கிலோ மீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 25 நிமிடத்தில் சென்றடைகிறது.

மும்பை - சோலாபூர் இடையிலான ஒரு வழிப் பயணத்துக்கு பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக்கான கட்டணம் ரூ.2015 ஆக உள்ளது. மும்பை - ஷீரடி இடையே ஒரு வழிப் பயணத்துக்கு பயணச்சீட்டுக் கட்டணம் ரூ.840 ஆகவும், எக்ஸிக்யூட்டிவ் வகுப்புக் கட்டணம் ரூ.1670 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

உணவு சேவைகளைப் பெற தனி கட்டணத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com