18 வயதுக்கு முன்பே திருமணம் முடித்த 26 எம்.பி.க்கள்
நாடு முழுவதும் சிறார் திருமணங்களை தடை செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் சிறார் திருமணங்களை தடை செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் 18 வயதுக்குள்பட்ட பெண்களை திருமணம் செய்வோர் மீது போக்சோ சட்டம் பாயும் என்று உத்தரவிடப்பட்டு நடவடிக்கையும் தொடங்கிவிட்டது.
2020ஆம் ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி, மக்களவை உறுப்பினர்கள் 543 பேரின் சுய விவரங்களின் தகவல்களை அடிப்படையாக வைத்து வெளியான செய்தியில், மக்களவை உறுப்பினர்களில் 26 பேர், 18 வயது ஆவதற்கு முன்பு திருமணம் முடித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
அதாவது, 543 எம்.பி.க்களில் 385 பேரின் திருமண வயதை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்ததாகவும், அதில் 26 மக்களவை உறுப்பினர்கள் 18 வயது நிறைவடைவதற்கு முன்னதாக திருமணம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு எட்டு வயதிலும், இரண்டு பேருக்கு 10 வயதிலும், திருமணம் நடந்திருக்கிறது. 16 வயதிலேயே 6 பேர் திருமணம் முடித்திருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைக்கப்பெற்றுள்ளது.
இவர்களில் 21 பேர் ஆண்கள் என்றும் 5 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...