தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

விசாகப்பட்டினம் எஃகு ஆலையில் வெடி விபத்து: 10 பேர் காயம் 

விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 2:34 pm

DIN

விசாகப்பட்டினத்தில் எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். 

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பொதுத் துறை நிறுவனமான எஃகு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சனிக்கிழமை பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் பத்து பேர் படுகாயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் ஸ்டீல் ஆலை பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சிஐஎஸ்எஃப் தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆலையின் இரும்பு உருகும் கடை-2 இல் திரவ இரும்புப் பொருள் வெடித்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.