நாட்டில் நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 24.09 சதவீதம் அதிகரிப்பாகும்.
இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி 10 ஆம் தேதி வரையிலான விவரங்களின்படி, நேரடி வரி வசூலில் சீரான வளா்ச்சி பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 24.09 சதவீதம் அதிகரிப்பாகும்.
வரிசெலுத்துவோருக்கு திருப்பி செலுத்தப்பட்ட தொகைக்கு பிறகான நிகர நேரடி வரி வசூல், ரூ.12.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, நிகர நேரடி வசூல் 18.40 சதவீதம் அதிகமாகும்.
இந்த வரி வருவாய்த் தொகையானது, 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 91.39 சதவீதம் ஆகும் மற்றும் 2022-23ம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவீதம் ஆகும்.
இந்த வரி வருவாய்த் தொகையானது, 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 91.39 சதவீதம் ஆகும். 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவீதம் பூா்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த வசூல் அடிப்படையில், பெருநிறுவன வருமான வரி வசூல் 19.33 சதவீதம் ஆகவும், தனிநபா் வருமான வரி (பங்குகள் பரிவா்த்தனை வரி உள்பட) வளர்ச்சி விகிதம் 29.63 சதவீதம் ஆகவும் உள்ளது. வரி செலுத்துவோருக்கு பணத்தைத் திருப்பி செலுத்துதல் தொடர்பான சரிசெய்தலுக்குப் பின்னர், பெருநிறுவன வருமான வரி 15.84 சதவீதம் ஆகவும், தனிநபர் வருமான வரி 21.93 சதவீதமும், தனிநபா் வருமான வரி (பங்குகள் பரிவா்த்தனை வரி உள்பட) 21.23 சதவீதம் ஆகவும் உள்ளது.
ஏப்ரல் 1, 2022 முதல் பிப்ரவரி 10, 2023 வரையில் ரூ. 2.69 லட்சம் கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 61.58% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மூட்டு வலிக்கு என்ன செய்யலாம்?

திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்து பயணம்: தில்லி முதல்வர் அறிவிப்பு!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசுகள் சரிந்து ரூ. 92.40 ஆக நிறைவு!

மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! மம்தா வென்ற தொகுதியில் சுவேந்து அதிகாரி போட்டி
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

