எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

நேரடி வரி வசூல் 15.67 லட்சம் கோடியாக உயர்வு!

நாட்டில் நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2023, 2:04 pm

DIN


நாட்டில் நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 24.09 சதவீதம் அதிகரிப்பாகும். 

இதுகுறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் நடப்பு நிதியாண்டின் பிப்ரவரி 10 ஆம் தேதி வரையிலான விவரங்களின்படி,  நேரடி வரி வசூலில் சீரான வளா்ச்சி பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் மொத்த நேரடி வரி வசூல் ரூ.15.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 24.09 சதவீதம் அதிகரிப்பாகும். 

வரிசெலுத்துவோருக்கு திருப்பி செலுத்தப்பட்ட தொகைக்கு பிறகான நிகர நேரடி வரி வசூல், ரூ.12.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, நிகர நேரடி வசூல் 18.40 சதவீதம் அதிகமாகும். 

இந்த வரி வருவாய்த் தொகையானது, 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 91.39 சதவீதம் ஆகும் மற்றும் 2022-23ம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவீதம் ஆகும்.

இந்த வரி வருவாய்த் தொகையானது, 2022-23 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் 91.39 சதவீதம் ஆகும். 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான நேரடி வரிகளின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் இது 78.65 சதவீதம் பூா்த்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மொத்த வசூல் அடிப்படையில், பெருநிறுவன வருமான வரி வசூல் 19.33 சதவீதம் ஆகவும், தனிநபா் வருமான வரி (பங்குகள் பரிவா்த்தனை வரி உள்பட) வளர்ச்சி விகிதம் 29.63 சதவீதம் ஆகவும் உள்ளது. வரி செலுத்துவோருக்கு பணத்தைத் திருப்பி செலுத்துதல் தொடர்பான சரிசெய்தலுக்குப் பின்னர், பெருநிறுவன வருமான வரி 15.84 சதவீதம் ஆகவும், தனிநபர் வருமான வரி 21.93 சதவீதமும், தனிநபா் வருமான வரி (பங்குகள் பரிவா்த்தனை வரி உள்பட) 21.23 சதவீதம் ஆகவும் உள்ளது.

 ஏப்ரல் 1, 2022 முதல் பிப்ரவரி 10, 2023 வரையில் ரூ. 2.69 லட்சம் கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது 61.58% அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.