/

உ.பி.யில் மருத்துவர் சுட்டுக்கொலை: மர்ம நபர் தப்பியோட்டம்

உ.பி.யில் கிளினிக்கில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மருத்துவரை மர்ம நபர் சுட்டதில் பலியானார். 

News image
கோப்புப்படம்
Updated On :7 பிப்ரவரி 2024, 6:29 am

DIN

உ.பி.யில் கிளினிக்கில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது மருத்துவரை மர்ம நபர் சுட்டதில் பலியானார். 

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத் முராத்நகர் நகரில் மருத்துவர் ஷம்ஷாத் தனது கிளினிக்கில் சனிக்கிழமை இரவு 11 மணியளவில் நோயாளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மருத்துவர் ஷம்ஷாத்தை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டார். 

உடனே அங்கிருந்த மக்கள் அவசரமாக மருத்துவர் ஷம்ஷாத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் நிகழ்விடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உ.பி.யில் பணியின்போது மருத்துவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.