ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வயநாட்டில் பழங்குடியினர் வீட்டுக்குச் சென்றார் ராகுல்

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இன்று தனது சொந்த தொகுதிக்குச் சென்றார். அண்மையில் மருத்துவக் கல்லூரிக்கு அருகே மரணமடைந்த பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தார்.

News image
Updated On :13 பிப்ரவரி 2023, 12:45 pm

DIN


வயநாடு: காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இன்று தனது சொந்த தொகுதிக்குச் சென்று, அண்மையில் மருத்துவக் கல்லூரிக்கு அருகே மரணமடைந்த பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று துக்கம் விசாரித்தார்.

விஸ்வநாதன் (46), என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அருகே  பிப்ரவரி 11ஆம் தேதி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவியை பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அவர் மரணமடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு கோழிக்கோடு வந்த ராகுல் காந்தி, வயநாட்டில் உள்ள விஸ்வநாதன் வீட்டுக்கு, கட்சித் தலைவர்களுடன் சென்றார். அவர்களது குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கேட்டறிந்தார்.

முன்னதாக, பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்திருந்த நிலையில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான், பிப்ரவரி 11ஆம் தேதி விஸ்வநாதன் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஒரு சில நாள்களுக்கு முன்பு, விஸ்வநாதனை சிலர் துன்புறுத்தியதாகவும், அதன்பிறகுதான் அவர் காணாமல் போனதாகவும் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.