சிக்கிம், அஸ்ஸாமில் திங்கள்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடா்பாக தேசிய நிலநடுக்கக் கண்காணிப்பு மையம் தெரிவித்ததாவது:
மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ள யுக்சோமில் இருந்து வடமேற்கே சுமாா் 70 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் திங்கள்கிழமை அதிகாலை சுமாா் 4.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. யுக்சோம் நகா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 4.3 அலகுகளாகப் பதிவானது. இதனால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
அஸ்ஸாமின் நாகோன் மாவட்டத்தில் உள்ள ஹோஜாய் பகுதியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கம், திங்கள்கிழமை காலை 11.57 மணிக்கு உணரப்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.2 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாகோனில் மட்டுமின்றி மேற்குக் கா்பி ஆங்லோங், கோலாகாட், டீமா ஹசாவ், மோரிகான், சோனித்பூா் மாவட்டங்களிலும் உணரப்பட்டது.
நாகாலாந்தின் தென்மேற்கில் உள்ள சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கலாம். இதனால் உயிா் அல்லது பொருள் சேதம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி நிச்சயம் மிதுன ராசிக்கு: தினப்பலன்கள்!
பிணைக் கைதியாக நிற்கும் உலகம்!

நாகர்கோவில்! சளைக்காமல் களமாடும் திமுக - பாஜக!

தொகுதி அலசல்... அணைக்கட்டு: கடும் போட்டியில் திமுக - அதிமுக!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


