காற்று மாசு: தில்லியை விட மோசமடைந்த மும்பை?
சுவிஸ் ஏர் டிராக்கிங் இன்டெக்ஸின் படி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை ஒரு வாரத்திற்குள் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக மும்பை உள்ளது என தெரியவந்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
மும்பை: கடந்த இரண்டு நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருவதால், மும்பைவாசிகள் நன்றாக சுவாசிக்கலாம். ஆனால் சுவிஸ் ஏர் டிராக்கிங் இன்டெக்ஸின் படி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 8 வரை ஒரு வாரத்திற்குள் உலகின் இரண்டாவது மாசுபட்ட நகரமாக மும்பை உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 29ம் தேதியன்று நிகழ்நேர சர்வதேச காற்றின் தர கண்காணிப்பு தரவரிசைப் படி மும்பை நகரம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இது பிப்ரவரி 2ம் தேதியன்று படிபடியாக ஏறி பிறகு சரிந்தது. பிப்ரவரி 8ம் தேதியன்று இந்த குறுயீடு இரண்டாவது இடத்திற்கு உயர்ந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 13ம் தேதியன்று காற்றின் தரம், உலகளவில் மூன்றாவது இடத்தில் மிகவும் ஆரோக்கியமற்ற நகரமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சமீப காலம் வரை இந்தியாவின் மிகவும் மாசுபட்ட மெட்ரோவாக இருந்த தில்லியை முந்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி மும்பையில் நவம்பர் முதல் ஜனவரி வரை உள்ள குளிர்காலம் முந்தைய மூன்று குளிர்காலங்களை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் வாகனங்கள், சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் இருந்து தொடர்ந்து வெளியேறும் தூசி மற்றும் புகையே இந்த சீரழிவுக்கு மிக முக்கிய காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஓ எச் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில், இரண்டு தலைமுறைக்கு முன்பு எப்போதாவது நுரையீரலில் கருப்பு திட்டுகளைக் காண முடிந்தது என்ற நிலையிலிருந்து தற்போது காற்று மாசுபாட்டால் புகைபிடிக்காதவர்களிடத்திலும் கூட கருப்பு நுரையீரல்கள் அல்லது நுரையீரல்களில் திட்டுகளுடன் இருப்பதை நாம் அடிக்கடி பார்க்கிறோம் என்றார்.
மும்பையில் ஐஐடி மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் 2020 ஆய்வின்படி, சாலை அல்லது கட்டுமான தூசுகளின் துகள்கள் காற்றில் 71% க்கும் அதிகமாக உள்ள நிலையில் மீதமுள்ளவை தொழில்துறை மற்றும் மின் அலகுகள், விமான நிலையம் மற்றும் குப்பைக் கிடங்குகளிலிருந்து வருகிறது என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...