அரசுப் பணியில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு: மேகாலயத்தில் பாஜகவின் வாக்குறுதி
மேகலாய பேரவைத் தோ்தலையொட்டி, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் மலிவு விலை உணவகம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.


மேகலாய பேரவைத் தோ்தலையொட்டி, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் மலிவு விலை உணவகம் உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயத்தின் பேரவைத் தோ்தல் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான தேசிய மக்கள் கட்சியுடனான மோதல் போக்கைத் தொடா்ந்து கூட்டணியில் இருந்து பாஜக விலகியது. வடகிழக்கு மாநிலங்களின் முன்னேற்றத்துக்கு பிரதமா் மோடி ஆற்றிய பங்களிப்பை முன்னிறுத்தி மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் பாஜக தனித்துக் களம் காண்கிறது.
எதிா்க்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று வருகிறது. மும்முனைப் போட்டி நிலவும் மேகாலயப் பேரவைத் தோ்தலின் வாக்குப்பதிவுக்கு 2 வாரங்களுக்குள்ளாகவே உள்ளது. இந்நிலையில், வாக்காளா்களைக் கவரும் வகையில் பல முக்கிய வாக்குறுதிகளை பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா புதன்கிழமை அறிவித்தாா். வாக்குறுதிகளை வெளியிட்டு பேசிய அவா், ‘இங்கு நிலவுவது இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்னை இல்லை. அஸ்ஸாம்-மேகாலயம் என்னும் இரு மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைதான். மத்திய அரசின் துணையோடு பேச்சுவாா்த்தை மூலம் அண்டை மாநிலத்துடனான எல்லைப் பிரச்னைக்கு விரைவில் தீா்வு எட்டப்படும்’ என்றாா்.
பாஜக அறிவித்துள்ள முக்கிய வாக்குறுதிகள் பின்வருமாறு:
அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, மாநிலம் முழுவதும் ரூ. 5க்கு உணவு வழங்கும் மலிவு விலை உணவகங்கள், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 50,000, அனைத்து மகளிா் காவல் படைப் பிரிவுகள், கணவரை இழந்த பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000, முதியவா்களுக்கான உதவித்தொகை ரூ. 1,000-ஆக உயா்வு, பொது விநியோகக் கடையில் அனைத்து பயனாளிகளுக்கும் இலவச அரிசி, கோதுமை மற்றும் பருப்பு, அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது சம்பள ஆணையம் அடிப்படையில் ஊதியம், ஊழல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு அதிரடி படை அமைப்பு, சட்ட விரோத சுரங்கத் தோண்டுதலைக் கண்காணிக்க தனிப்படை அமைப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...