தொடர்ந்து புகாருக்குள்ளாகும் ரயில்வே உணவுகள்!
ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமற்று மிகவும் மோசமானதாக இருப்பதாக பெண் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.


ரயிலில் வழங்கப்பட்ட உணவு தரமற்று மிகவும் மோசமானதாக இருப்பதாக பெண் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
ரயிலில் வழங்கப்பட்ட தரமற்ற உணவையும் சுட்டுரையில் பதிவிட்டு ரயில் டிக்கெட் விலை மட்டும் நாளுக்கு நாள் ஏற்றம் காண்கிறது. ஆனால், ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் மட்டும் இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளது என விமர்சித்துள்ளார்.
நாடு முழுவதும் ஏராளமான மக்கள் ரயில் பயணங்களை மேற்கொள்கின்றனர். பலர் நெடுந்தூர ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழலும் உண்டு.
நாட்டின் மிகப்பெரிய துறைகளில் ரயில்வேத் துறையும் ஒன்று. ரயில் பயணங்கள் நாடு முழுவதையும் இணைக்கின்றன. பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் இந்திய ரயில் பணத்தை விரும்புகின்றனர்.
எனினும், ரயிலில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புகார்கள் இன்னும் எழுந்த வண்ணமே உள்ளன. இது குறித்து பல முறை செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், ரயிலில் வழங்கப்படும் உணவு இன்னும் தரமற்றே இருப்பதாக பெண் பயணி ஒருவர் சுட்டுரையில் பதிவிட்டுள்ளார். அதில், ரயில்வேத் துறையில் வழங்கப்படும் உங்கள் உணவை நீங்கள் சாப்பிட்டதுண்டா? இதுபோன்ற தரமற்ற உணவை நீங்கள் உங்கள் குடும்பத்துக்கும் குழந்தைகளுக்கும் வழங்குவீர்களா? சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு போன்று உள்ளது. டிக்கெட் விலை நாளுக்கு நாள் உயர்கிறது. ஆனால், இன்னும் மோசமான உணவையே பயணிகளுக்கு வழங்குகிறீர்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிட்டுள்ள அவர், ஐஆர்சிடிசியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எதிரானதல்ல இந்த பதிவு. இது உணவு கொண்டுவந்தவரின் தவறு அல்ல. அவர்கள் ரயில்வே தயாரிக்கும் உணவை கொண்டுவந்து கொடுக்கிறார்கள். ரயில் ஊழியர்கள் பணத்தை திரும்பக் கொடுக்க வந்தார். ஆனால் இது அவரின் தவறு அல்ல என்று ரயில்வேத் துறை அலுவலகத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...