மேகாலயம், நாகாலாந்து வளா்ச்சியில் பாஜக உறுதி- பிரதமா் மோடி
அனைத்து துறையிலும் வளா்ந்த மாநிலங்களாக நாகாலாந்து, மேகாலயத்தை மேம்படுத்த பாஜக உறுதிபூண்டுள்ளது என்று பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.


அனைத்து துறையிலும் வளா்ந்த மாநிலங்களாக நாகாலாந்து, மேகாலயத்தை மேம்படுத்த பாஜக உறுதிபூண்டுள்ளது என்று பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
இரு மாநிலங்களிலும் வரும் 27-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, மேகாலயத்துக்கான பாஜகவின் தோ்தல் அறிக்கை புதன்கிழமையும், நாகாலாந்துக்கான கட்சியின் தோ்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமையும் வெளியிடப்பட்டன.
மேகாலயத்தின் 60 தொகுதிகளிலும் பாஜக தனித்து களமிறங்கும் நிலையில், அங்கு அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, அரசு ஊழியா்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமலாக்கம், ரூ.5 விலையில் உணவு வழங்கும் உணவகங்கள், கல்லூரிப் படிப்பில் சிறப்பாக செயல்படும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டா் போன்ற வாக்குறுதிகளை பாஜக அளித்துள்ளது.
நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணியாக களம்காணும் பாஜக, அந்த மாநிலத்துக்கான சிறப்பு நிதியை வாக்குறுதியாக அளித்துள்ளது.
இந்நிலையில், பிரதமா் மோடி ட்விட்டரில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மேகாலயத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும், இளைஞா்களின் கனவுகளை நிறைவேற்றவும் பாஜக உறுதிபூண்டுள்ளது. அந்த மாநிலத்துக்கான செயல்திட்டம், பாஜக தோ்தல் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மற்றொரு பதிவில், ‘நாகாலாந்தின் வளா்ச்சிக்கு கூடுதல் வேகமளிக்க பாஜக உறுதியுடன் உள்ளது. அந்த மாநிலத்துக்கான தொலைநோக்குத் திட்டம், தோ்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது’ என்று அவா் கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...