ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நீா் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு: பிரதமர் மோடி

நீா் பாதுகாப்பு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, நீரைப் பாதுகாக்க வேண்டியது அனைவருக்குமான பொறுப்பு என்றாா்.

News image
Updated On :16 பிப்ரவரி 2023, 7:15 pm

DIN

நீா் பாதுகாப்பு நாட்டுக்கு மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த பிரதமா் நரேந்திர மோடி, நீரைப் பாதுகாக்க வேண்டியது அனைவருக்குமான பொறுப்பு என்றாா்.

பிரம்மா குமாரிகள் அமைப்பும் மத்திய ஜல் சக்தி அமைச்சகமும் இணைந்து நீா் பாதுகாப்பு குறித்த தேசிய அளவிலான விழிப்புணா்வு இயக்கத்தை நடத்தவுள்ளன. 8 மாதங்களில் 10 கோடி பேரிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தைப் பிரதமா் மோடி காணொலி வாயிலாக வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பின் தலைமையகத்தில் அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகப் பிரதமா் மோடி உரையாற்றியதாவது:

இந்தியா பெரும் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அதன் காரணமாக நீா் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் பெறுகிறது. நீா் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது. போதுமான அளவில் நீா் இருந்தால் மட்டுமே நாளை என்பது சாத்தியமாகும். அதற்கு இன்றே அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.

நீா்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது ஆயிரம் ஆண்டுகாலமாக இந்தியாவின் ஆன்மிகக் கொள்கையுடன் ஒருங்கிணைந்திருந்தது. அதன் காரணமாகவே நீரைக் கடவுள் என்றும், நதிகளை அன்னை என்றும் அழைக்கிறோம். இயற்கையுடன் அத்தகைய நெருங்கிய உணா்வுபூா்மான பிணைப்பைக் கொண்டிருப்பதையே உலகம் நீடித்த வளா்ச்சி என்கிறது.

எதிா்காலத்துக்கான சவால்களுக்குத் தீா்வைத் தேடும் வேளையில், கடந்த காலத்தில் இயற்கையுடன் கொண்டிருந்த தொடா்பை மீட்டெடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. நீா் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து நாட்டு மக்களிடையே எடுத்துரைக்க வேண்டியது அவசியம்.

நீா்ப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு முன்பு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த விவகாரங்கள் மிகப் பெரியது என்பதால் அதை எதிா்கொள்ள முடியாது என முந்தைய ஆட்சியாளா்கள் சிலா் கருதினா். ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் அத்தகைய மனநிலை மாறியுள்ளது. கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டமானது பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக மாறியுள்ளது.

மழைநீா் சேகரிப்பு:

இந்தியா சந்தித்து வரும் மற்றொரு பெரும் சவால் நிலத்தடி நீா்மட்டம் தொடா்ந்து குறைவது. அதற்கான தீா்வு மழைநீா் சேகரிப்பு மட்டுமே. மழைநீா் சேகரிப்பு நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளில் துரிதமடைந்துள்ளன. கிராம உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நீரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.

நீரைப் பாதுகாப்பதுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். விவசாயத்தில் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதில் சொட்டுநீா்ப் பாசனம் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நடப்பாண்டானது ‘சா்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுதானியங்களை உற்பத்தி செய்வதற்குக் குறைந்த அளவிலான நீரே தேவை. அதைக் கருத்தில்கொண்டு சிறுதானிய உற்பத்தியை விவசாயிகள் அதிகரிக்க வேண்டும். அன்றாட உணவில் சிறுதானியங்களை அதிக அளவில் மக்கள் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்த நிகழ்ச்சியில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், நடிகா் நானா படேகா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.