தெலங்கானாதான் இந்தியாவின் ஆப்கானிஸ்தான் என்றும் கேசிஆர் தான் தலிபான் என்றும் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா கடுமையாக விமரிசித்துள்ளார்.
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சித் தலைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆளும் சந்திர சேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். தெலங்கானா மக்களை சந்திக்க மாநிலம் முழுவதும் பல பகுதிகளில் நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஆளும் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகிறார்.
நேற்று மஹபூபாபாத் பகுதியில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய அவர், இந்தியாவின் ஆப்கானிஸ்தான் தெலங்கானா என்றும் சந்திரசேகர் ராவ்(கேசிஆர்)தான் தலிபான் என்றும் கூறியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கேசிஆர் ஒரு சர்வாதிகாரி என்றும் தெலங்கானாவில் இந்திய அரசியலமைப்பு இல்லை, மாறாக, கேசிஆர் அரசியலமைப்புதான் இருக்கிறது என்றார்.
மஹபூபாபாத் எம்எல்ஏ பனோத் ஷங்கர் நாயக்கின் சட்டவிரோத நில ஒப்பந்தங்கள் குறித்து கேள்வி எழுப்பிய ஷர்மிளாவை, நாயக் விமரிசித்துள்ளார். இதற்கு பதில் அளித்துப் பேசியதற்காக ஷர்மிளாவை நேற்று தெலங்கானா போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது குறித்துப் பேசிய ஷர்மிளா, 'கேசிஆர் என்னைப் பார்த்து பயப்படுகிறார் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. எனது நடைப்பயணம் 3,000 கிலோமீட்டர் தூரம் கடந்துள்ளது. ஆரம்பம் முதல் கே.சி.ஆர். தரப்பினர் இதை முறியடிக்க முயன்று வருகின்றனர். ஆனால் முடியவில்லை.
தெலங்கானாவில் பெண்கள் மதிக்கப்படுவதில்லை. நான் அரசியலுக்கு வந்து நடைப்பயணம் தொடங்கியதில் இருந்து ஆளும் கட்சித் தலைவர்கள் என்னை தரக்குறைவான வார்த்தைகளால் விமரிசிக்கின்றனர். மகளிர் ஆணையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.
இதையும் படிக்க | சிவசேனை பெயர், சின்னம்: உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முடிவில்லாத தொடர்கதை!

உயா்நிலை பாலப் பணிகள் ஆய்வு

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு வரவேற்பு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

